Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பெண்களை விட ஆண்கள் கல்வி மற்றும் தொழில் துறை ரீதியாக பின்னோக்கி செல்கின்ற ஒரு பரிதாபமான நிலைமையை நாம் இன்று காணக்கூடியதாக உள்ளது. இவ்விடயம் கல்வியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் நிதர்சனமாக உள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
சமூக மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற பண்பாட்டு 'எஸ்.ஆர்.சி பரவசம்' முப்பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (13) மாலை பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
இன்று அதிகமான மாணவர்கள் கையடக்கத்தொலைபேசியில் மூழ்கி தங்களது கல்வி ரீதியான தேடல்களில் இருக்காமல் வேறுத் திசைகளுக்கு தங்களை மாற்றி செயற்படுகின்றதொரு பரிதாப நிலைமையையும் நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.
மாணவர்களை கல்வி ரீதியாக முன்னேற்றம் செய்வதற்கு அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களும் முழுமையாக தங்களை அர்ப்பணித்து செயற்படவேண்டிய காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago