2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

10ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Sudharshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்,வடிவேல் சக்திவேல் ,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.கே.றஹ்மத்துல்லா

 கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நினைவு தின நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள், நினைவுப் பேருரை, உதவிகள் வழங்கல், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்பட வெளியீடும் இடம்பெறவுள்ளது.

1969 டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி குறுமன்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன், கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி திருகோணமலை உவர்மலையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் பணியில் சேர்ந்தார்.

இந்த நினைவு தின நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு சம்மேளனத்தின் தலைவர் தேவ் அதிரன் அழைப்பு விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X