Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைசல் இஸ்மாயில்
ஒரு காலத்தில் ஆயுர் வேத சுதேச வைத்தியம் பற்றி அறிந்திராத எமது மக்கள் இன்று அதன் முக்கியத்துவத்தை விளங்கி பயன் பெற்று வருவது வரவேற்கத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாண சுகாதரா அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அம்பியுலன்ஸ் வண்டி மற்றும் உபகரணங்களை நேற்று(03) மாலை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதிகளவிலான மக்கள் இன்று ஆயுர்வேத வைத்தியத் துறையின் பக்கம் மாறிவருவதனால் அத்துறையை நவீன மயப்படுத்தி அபிவிருத்தி சேய்ய வேண்டி உள்ளது.
இதற்காக எனது சுகாதார அமைச்சுப் பதிவியின் மூலம் முழு கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள் இன, மத, பிரதேச வேறுபாடுகள் காணாது நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.
இதற்காக இத்துறை சார்ந்த வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் அர்பபணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.
எனக்கு வாக்களித்து மக்களின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பிய எனது மக்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த சுகாதார அமைச்சின் முதல் அபிவிருத்தி வேலையை எனது சொந்த ஊரில் ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago