2025 மே 03, சனிக்கிழமை

50 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கடந்த வருடம் இலங்கையில் 50 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  அதிகளவில் 10 மாவட்டங்கள் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளாதக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் அம்பாறை மாவட்டம் 10வது இடத்திலுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போ​தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை வலயத்தின் கீழுள்ள பிரதேசங்களில் 3 பேர் டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளனர். இதேபோல் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பிரதேசத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஆகக் குறைந்த டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்குள்ளான மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்முனை தெற்கு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகமுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அப்பிரதேசங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டும் வருகின்றன. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் மத்திய சுகாதார அமைச்சும் இணைந்து  டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான நிதிகளை வழங்கவுள்ளது.

சுகாதாரத்துறை மாத்திரம் உதவி செய்ய முடியாது. அனைத்து திணைக்களங்களும் ஒத்துழைத்தால் தான் இதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X