2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'ஆலயக் காணிக்கு உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

பொத்துவில் ஊரணி சித்தி விநாயகர் ஆலயத்தின் காணியை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இருவர் தங்களுக்குரியதெனக் கூறி போலி ஆவணங்களுடன் அபரிக்க வருவதை  ஏற்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்தக் காணி தங்களுக்குரியதெனக் கூறி போலி ஆவணங்களை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இவர் சமர்ப்பித்துள்ளனர்.  அக்காணியை உடனடியாக ஆலய நிர்வாகம் தரவேண்டும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.  இது தொடர்பாக பொத்துவில் பொலிஸில் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறுதான் இப்பிரதேசங்களிலே இரு நபர்கள் ஆலயங்கள் மற்றும் தனியார்களின் காணிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து இன்று வரைக்கும் போலி ஆவணங்களை தயார்படுத்தி தமிழர்களின் நிலங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இவ்வாறன செயற்பாடுகளை ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X