2025 மே 19, திங்கட்கிழமை

'இந்துசமய விவகார அமைச்சரும் திணைக்களமும் மந்தகதியில் செயற்படுகின்றன'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கடந்த ஆட்சிக்காலத்தில் மத விவகார அமைச்சராக இருந்து இந்துசமயத்துக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விட தற்போது நல்லாட்சி என்று கூறுகின்ற இந்த ஆட்சிக் காலத்தில் தமிழராகவும்; இந்துவாக இருக்கின்ற இந்துசமய விவகார அமைச்சரும் அதன்; திணைக்களமும் மந்தமான கதியிலேயே செயற்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்

அம்பாறை, நிந்தவூர் சிங்காரபுரி கிராமத்திலுள்ள சிங்காரபுரிமாரியமன் ஆலயத்தில் கல்முனை சிவநெறி அறப்பணி மன்றத்தின் அனுசரனையுடன்  அறநெறிப் பாடசாலைக்கு 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று சனிக்கிழமை(18) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 'கடந்த ஆட்சிக்காலத்தில் மத விவகார அமைச்சராக எல்லா மதங்களுக்கும் ஒரே அமைச்சராக பிரதமர் இருந்து செயற்பட்டார். அப்போது அவர் இந்துசமய செயற்பாடுகள் நடைபெற்றபோது அவற்றை வலுவாக்கிக்கொண்டு செல்ல நாங்கள் பூரண பங்களிப்பை செய்துகொண்டிருந்தோம். அப்போது இலங்கையில் கூடிய வருமானம் பெறும் இந்து ஆலயங்களை அரசாங்கம் தாங்கள் சுவீகரிக்க இரண்டு தடவைகள்  முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தினோம். அவருடன் பல தடவைகள் இந்துசமய நடவடிக்கை சார்பாக வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டோம்
தற்போது நல்லாட்சி என்று கூறுகின்ற இந்த ஆட்சிக்காலத்தில் இந்துசமய விவகார அமைச்சு வந்தபோது அதற்கு இதன் அமைச்சராக இருப்பவர் பொன்னம்பலவானேஸ்வர ஆலயத் தலைவராக இருப்பவரும் இந்த நாட்டிலே சைவத்தையும் தமிழiயும் வளர்த்த சேர் பொன் இராமநாதன் அவர்களின் பேரனாக இருப்பவர். இந்தப் பொறுப்பை ஏற்றதும் மிகவும் திறமையாக எமக்கு இந்துசமயப் பணிக்காக அயராது உழைப்பவர் என எதிர்பார்த்தோம். நாங்களும் அவருக்கு பூரண ஆதரவை கொடுப்பதற்கு ஆயத்தமாக இருந்தோம். ஆனால், இதுவரை ஒரு தடவையாயினும் அவர் எங்களை அழைத்து  இந்துசமய ரீதியாக என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என யாரையும் கேட்கவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் எங்கள் இனத்தைச் சேராத ஒருவர் மதவிவாகார அமைச்சராக இருந்தாலும் எங்களை கூப்பிட்டு ஆலோசனைகளை பெற்றார். இருந்தபோதும் இந்தநாட்டில் இந்த ஆட்சி மாற்றத்திற்கு பங்காளியாக இருந்தவர்கள்  நாங்கள்.  அந்த வகையிலேயே அந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரும் தமிழர் இந்து என்ற வகையிலாவது இந்துப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனைகள் பெற்றிருக்கவேண்டும். ஆனால்  அது தற்போது இல்லை. அதேவேளை இந்துசமய ரீதியாக பிரச்சினையிருக்கின்றது. ஆனால் அவர் அதில் கவனம் செலுத்தவில்லை.

கடந்த காலத்தில் இந்துசமய திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சாந்தி நாவுக்கரசு இப்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு தெரிவித்தாலும் அவரை அணுகி பல நடவடிக்கைகளை செய்தோம். ஆனால், இப்போது அத்திணைக்களத்தில் இருக்கின்ற செயற்பாடுகள் மந்தகதியிலேயே இருக்கின்றது. அதேவேளை கடந்த காலங்களில் இந்துசமய ரீதியான நிகழ்வுகள் எங்கள் பகுதியில் நடக்கும்போது இந்து என்ற வகையிலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அவ்விழாக்களுக்கு எங்களை அழைப்பார்கள். ஆனால், இன்று எங்களை அழைப்பதில்லை இது ஏன் என்று தெரியாமல் இருக்கின்றது.

எனவே, மிக விரைவில் நாடாளுமன்றத்தில் இந்துவிவகார அமைச்சு செயற்பாடு காரணமாகவும் திணைக்களத்தின் செயற்பாடு காரணமாகவும் பல செயற்பாட்டு அறிக்கைகளையும் மந்தநிலமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்த இருக்கின்றேன். எனவே இந்துவாக பிறந்தவர்கள் எங்கள் சமயத்தை பாதுகாக்கவேண்டிய கடமை இருக்கின்றது. அமைச்சர் கூடியகவனம் செலுத்தவேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டன. இந்த சிங்காரிபுரி கிராமத்தில் இருந்து 108 குடும்பங்களும் இன்று இந்த பூர்வீக மண்ணை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு நான் அவர்களுக்கு கௌரவமான நன்றிகளை தெரிவிக்கின்றேன் அதேவேளை எமது பூர்வீக கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டும். திட்மிட்ட குடியேற்றம் மதமாற்றம் இனமாற்றத்திற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு வருபவர்கள் மீது நீங்கள் தடுத்து சட்டத்தை நாடி நடவடிக்கை எடுங்கள். ஏன் என்றால் இனமும் மதமும் பாதுகாக்கவேண்டும் இனமும் மதமும் விடுதலை பெற வேண்டுமென்பதற்காகதான் எங்கள் உறவுகள் இந்த மண்ணிலே பலத pயாகங்களையும் போராட்டங்களையும் நடாத்தினார்கள்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X