Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்,க.சரவணன்
இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் 60 சதவீதமான வருமானம் பெண்களின் உழைப்பால் கிடைக்கின்றது. இதனை ஆண்கள் புரிந்துகொண்டு பெண்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கான புதிய பணியகத்தை திறந்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (07) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'எமது நாட்டில் 52 சதவீதமாக பெண்கள் காணப்படுகின்றனர். இவர்கள் முக்கிய அந்நிய செலாவாணியைப் பெற்றுத்தரக்கூடிய தொழில்களான ஆடைத் தொழிற்சாலை, தேயிலைத் தோட்டம் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்புச் செய்து வருகின்றனர்.
ஆகவே, இவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பாரிய பணிக்கு ஆண்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
அந்த வகையில் ஆண்கள் பூரண ஆதரவுடன் கூடிய பாதுகாப்பை பெண்களுக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.
'ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதுடன், நாட்டிலுள்ள இன முரண்பாடுகளை நீக்கி அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய வகையில் நல்லதொரு தீர்வை வழங்குவதற்கான செயற்பாடுகளில் முனைப்புக்காட்டி வருகின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .