Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள்; இணைந்ததான தீர்வைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோமென்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளமையானது, அவர் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்திலிருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுவதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ. வின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ்மொழியைப்; பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களது பழக்கவழக்கங்கள், பேச்சு மொழி, கலாசாரம் என்பன முற்றாக வேறான ஒன்றாகும்.
பெரும்பான்மையின மக்களால், சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தார்களோ, அதனை விட அதிகமான துன்பங்களை வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பான்மைத் தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள் அனுபவித்தார்கள் என்பதனை சம்பந்தனால் மறுக்க முடியுமா? என்ற கேள்வியினை நான் கேட்க விரும்புகின்றேன்.
இனியும் எம்மக்களால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது. இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க நாங்கள் முட்டாள்களும் இல்லை. ஏனென்றால், இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது ஒரு தமிழ் நண்பர் இருந்திருந்தால் கூட குறைந்தது 5000 தமிழ் நண்பர்கள் இருந்திருப்பார்கள். இவர்களில் 5 பேராவது வெளியில் வந்து பசித்த வயிறோடும், கோர வெயிலில் வெறும் காலோடும் நின்று கொண்டிருந்த தமது முஸ்லிம் நண்பர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுத்தார்களா? இல்லையே. ஆனால், அம்மக்களிடமிருந்து சூறையாடப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மறுநாள்; ஏலத்தில் விட்டபோது முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டது அந்த நண்பர்கள்தான் என்பதனை உங்களால் மறுக்க முடியுமா?
வரலாறுகளை திரும்பிப் பாருங்கள். உங்களுக்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும். பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது, வயல் காணிகளுக்கு கப்பம் அறவிட்டது, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என மூச்சு விடாமல் எங்களால் உதாரனங்களையும் இசம்பவங்களையும் கூற முடியும்.
உங்களை நாங்கள் பலமுறை சோதித்துப் பார்த்து விட்டோம.; நீங்கள் தங்கமல்ல. ஆகவே போலியை இன்னுமொருமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கு மண் கிழக்கு மக்களுக்குச் சொந்தமானது அதனை இணைப்பதற்கு ஒரு காலமும் அங்கிகரிக்க முடியாது. தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ நியாம் கேட்கும் நீங்கள் முஸ்லிம் மக்களையும் அங்கு வாழுகின்ற ஏனைய சிறுபான்மை மக்களையும் அடக்கியாள வேண்டும் என்று நினைக்க முனையக்கூடாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .