Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு,கனகராசா சரவணன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) முன்னாள் வாகனச் சாரதி உட்பட மூன்று ஆதரவாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர் மற்றும் மனைவியர் தெரிவித்தனர்.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-01 ஆர்.டி.ஏ.வீதியில் வசிக்கும் அழகரெட்னம் யுவராஜ் (வயது 25) என்பவர் தனியார் பஸ் சாரதியாக பணிபுரிந்து வருவதுடன், பஸ்ஸில் வைத்தே கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, வி.சி.றோட் தம்பிலுவில் 1இல் வசிக்கும் கணேசமூர்த்தி கமலநாதன் (மதி) அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
தம்பிலுவில்- 01 முனையக்காடு தென்றல் வீதியில் வசிக்கும் கணேஷ் மனோகரன் (மனோ) (வயது 30) என்பவரை, திருக்கோவில் அழைத்துவரும் படி தெரிவித்தையடுத்து, தான் அவரை அழைத்துச் சென்று அம்பாறை
பொலிஸாரிடம் கையளித்ததாக, அவரது மனைவி தெரிவித்துள்ளார். இக்கைது தொடர்பாக பெற்றோர்களின் கருத்தினை அடுத்து, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது, மேற்படி நபர்கள் விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், இனிய பாரதியுடன் இணைந்து அவரது ஆதரவாளர்களாகச் செயற்பட்டு வந்துள்ளதாக, பெற்றோர் மற்றும் மனைவிமாரின் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago