2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'இன்றைய சமூகம் புத்தகப் பூச்சிகளாக மாறுவது ஆபத்தானது'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

நாட்டின் தேசிய கீதத்தைக் கூட முறையாக பாடுவதற்கு மாணவர்களை பயிற்றுவிக்காத பாடசாலைகள் இன்னும் பல இருந்து வருவதனையிட்டு கவலைப்பட வேண்டி உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் நேற்று (25) மாலை ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர், பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவிகள் மற்றும் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஒரு பாடசாலையின் வளர்ச்சியினை அப்பாடசாலை மாணவர்களின் வெளிக்கள செயற்பாடுகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. வருமானத்திற்கும் தொழில்களுக்குமாக  கல்வியை பயன்படுத்திவரும் இன்றைய சமூகம் ஒழுக்கம், கலாசார விழுமியிங்கள், நடத்தை கோலங்களை எல்லாம் மறந்து வெறும் புத்தக பூச்சிகளாக மாறிவருவது இந்த உலகிற்கு ஆபத்தான சமிஞ்ஞை அறிகுறிகளை  வெளிக்காட்டி வருகின்றது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X