2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'இம்மாத இறுதிக்குள் நிரந்தர பயிற்சி நிலையக் கட்டடம் வழங்குவேன்'

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

எவ்வளவு செலவுகளானாலும் விழிப்புலனற்றோர்களுக்கான நிரந்தர பயிற்சி நிலையக் கட்டடம் ஒன்றை இம்மாத இறுதிக்குள் வழங்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

விழிப்புலனற்றோர் அமைப்பின் கிழக்குப் பிராந்திய தலைவர் எம்.பீ.அப்துல் ரஹ்மான் தலைமையில் இலங்கை கிறீன் பலோவேஸ் நிறுவனத்தின் அனுசரணையில் அக்கரைப்பற்றிலுள்ள விழிப்புலனற்றோர்களுக்கான தற்காலிக பயிற்சி நிலையம் ஒன்றை அக்கரைப்பற்று பதுர் நகரில் நேற்றிரவு (23) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இங்குள்ள மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்களது செயற்பாடுகளை நாம் எம் கண் முன்னால் இன்று பார்த்தோம். இவர்களை சமூகத்தில் இருந்து ஒரு நாளும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. இவர்கள் எல்லோரும் நம்மவர்கள். இறைவன் இவர்களுக்கு விசேட திறன்களை வழங்கியுள்ளான்.

இந்த பயிற்சி நிலையத்துக்கு தேவையான உதவிகளை எனது நிதியொதிக்கீட்டின் மூலமும் எனது நண்பர்களின் துணையுடனும் வழங்க திட்டமிட்டுள்ளேன். அத்துடன் இந்நிலையத்துக்கு நிரந்தர வருமானம் பெறுவதற்கான திட்டங்களையும் செயற்படுத்தவுள்ளேன்.

அத்துடன், பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X