2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

“இயந்திரம் மூலம் நாற்று நட நடவடிக்கை”

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் 2015/2016 ஆண்டுக்கான மகாபோக நெற்செய்கைக்கென முதல் தடவையாக இயந்திரம் மூலம் நாற்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் 2015/2016 ஆண்டுக்கான மகாபோக நெற்செய்கை 70 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்படவுள்ளது.இதனடிப்படையில் இயந்திரம் மூலம் நாற்றுகளை நடுவது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறித்தப்பட்டு வருகின்றது.

இயந்திரம் மூலம் நாற்றுகளை நடுவதால் உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு நோய்த் தாக்கம், செலவு போன்றவை குறைவாகக் காணப்படும்.

களை கட்டும் கிருமி நாசினி தடை செய்யப்பட்டுள்ளதால் களை கட்டும் முறையும் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது, செலவு குறைவு, உணவில் நச்சுத்தன்மை ஏற்படாது, நெல் உற்பத்தியில் வீழ்ச்சி இல்லை போன்ற நன்மைகள் விவசாயிகளுக்கு ஏற்படும்.

மேலும்,அதிக விளைச்சலை பெறக் கூடிய ஏ. ரீ. 362, வீ. ஜீ. 357 புதிய நெல் இனங்கள் விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X