Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்தால் நாடு தழுவிய ரீதியில் அரச மற்றும் அரச சார்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான 2016ஆம் ஆண்டுக்கான தொகை மதிப்பு பணி, எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் நடைபெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட புள்ளி விபர தலைமைத்துவ பீட உத்தியோகத்தர் எம்.எம். முஹம்மது தையார் இன்று புதன்கிழமை (09) தெரிவித்தார்.
இதற்கமைய, அம்பாறை மாவட்டத்துக்கான தொகை மதிப்பை மேற்கொள்ளும் இணைப்பு உத்தியோகத்தர்களாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் இது தொடர்பாக தொகை மதிப்பு சம்பந்தமாக விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பாடசாலை ஆசிரியர்களின் தொகை மதிப்பு, மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இவ்வாறான தொகை மதிப்பீடு கடந்த 10 வருடங்களுக்கு பின்னர் இவ்வருடம் இடம்பெறவுள்ளது.
இக் கணக்கெடுப்பில் நிரந்தர, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று சம்பளம் பெறும் அரச மற்றும் அரச சார்புத் துறையின் சகல உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் தொகை மதிப்புக்குட்படுத்தப்படவுள்ளனர்” என்றார்.
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago