2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'இலவச சீருடைத்துணி வழங்க வர்த்தக நிறுவனங்கள் தெரிவு'

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்கள் மூலம் இலவச சீருடைத்துணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்கள் மூலம் இலவச சீருடைத்துணி வழங்க கல்முனை கல்வி வலயத்துக்குட்ட பிரதேசத்தில் 32 வர்த்தக நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சர்களைக் கொண்டு பின்வரும் பெயர்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மருதமுனையில்:-பறகத் டெக்ஸ்,சீப் கோணர்,மெம் டெக்ஸட்;டையில், ஜெஸீமாஸ்,

கல்முனையில்:-ஸ்மாட் டெக்ஸ்டையில், பெஷன் டெக்ஸ், நியூபாவா டெக்ஸ்,பெஸ்ட் பொயின்ட்,பேஸ் டெக்ஸ்,சனா டெக்ஸ்;டையில், ஒரேன்ஞ்; டெக்ஸ், எம்.எம்.ஏ.டெக்ஸ்,சபாஸ் டெக்ஸ்,பெஸ்ட்டர்.

சாய்ந்தமருதில்:-முபாறக் டெக்ஸ்,நியூ செலக்ஸன்,பெமிலி சொயிஸ்,டில்லி பெஸன்,என்.ஆர் சைஸ்பார்க்,மஜீதியாஸ்,ஏசியா டெக்ஸ்டையிஸ்,ஆலிப் டெக்ஸ்,றியல் வன்,டொப்ஜே டெக்ஸ் டெக்ஸ்,சல்மா டெக்ஸ்,எக்ஸ்போட் டெக்ஸ்,

நற்பிட்டிமுனையில்:-முபீத் டெக்ஸ்,

காரைதீவில்:- டின்ஸ் இந்தியன்,

நிந்தவூரில்:-பஸீல் டெக்ஸ்,நிம்றான் டெக்ஸ்,அன்வர் டெயிலரிங்,ஹன்டெக்ஸ் ஆகிய 32 வர்த்தக நிறுவனங்கள் ஊடாக  வவுச்சர்களுக்கு மாணவர்களுக்கான சீருடைத் துணி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .