Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜ.ஏ.கபூா்
தேகாரோக்கியமுள்ள உத்தியோகத்தர்களை உருவாக்குவதன் மூலம், மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கக் கூடிய ஆரோக்கியமான உத்தியோகத்தர்களை பெறமுடியும். இன்று தொற்றா நோயே எம்மில் அதிகமானவர்களை ஆட்கொண்டுள்ளது. இதற்கு மிகமுக்கியமான காரணம் எமது உணவுப் பழக்கமே ஆகும் என்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய வாரம் - 2016யை முன்னிட்டு, இன்று (27) உத்தயோகத்தர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதை வலியுறுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கும் மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் தலைமையில் நடை பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் முதலில் தன்னை பரிசீலனை செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் பி.சுதந்திர மதன் மற்றும் டொக்டர் எம்.எஸ்.சாதீக் ஆகியோர் தொற்றா நோய் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago