Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு கூடுதலாகத் தேவையாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
மேலும், பெண்களின் பிரச்சினைகளை உரிய இடத்தில் கூறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி உபகரணங்கள், அல் மபாஸா மகளிர் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14) வழங்கப்பட்டது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'உள்ளூராட்சிமன்றமானது ஊர்களின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற ஒரு சபையாக காணப்படுகிறது. அச்சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவையாகவுள்ளது' என்றார்.
'தற்போதைய சனத்தொகையில் ஆண்களை விட பெண்கள் இலங்கையில் கூடுதலாகவுள்ளனர். ஆனால் உள்ளூராட்சிமன்றங்கள், மாகாண சபைகள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இந்நிலையை மாற்றுவதற்காக உள்ளூராட்சிமன்றங்களில் 25 சதவீதம் பெண்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் தேர்தலில் போட்டியிடத் தயங்குவார்கள். இதனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்; தலைமை ஒரு சலுகை தந்துள்ளனர். பெண்கள் தேர்தலில் போட்டியிடாமல் உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றும் கட்சியினால் நியமிக்கப்படவுள்ளனர். ஆகையால், இப்போதிருந்தே சிறந்த ஆளுமை மிக்க பெண்களை மகளிர் சங்கங்களிலிருந்து உருவாக்க நாம் அனைவரும் தயராக வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 May 2025