Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 24 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆசியா பவுண்டேஷனின் அனுசரணையுடன் அமைக்கப்படுகின்ற உள்ளூராட்சி வள நிலையமானது, உள்ளூராட்சிமன்றங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுமென ஆசியா பவுண்டேஷனின் செயற்றிட்ட தொழில்நுட்ப நிபுணர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனைக் கூறினார்.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் உள்ளூராட்சிமன்றங்களில் ஆசியா பவுண்டேஷன் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ள 'உள்ளூராட்சி ஆளுகை' எனும் செயற்றிட்டம் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும் உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சி அளிப்பதற்குமாக அமைக்கப்படுகின்ற இந்த உள்ளூராட்சி வள நிலையத்துக்காக ஆசியா பவுண்டேஷன் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்' என்றார்.
'குறிப்பாக 50 உத்தியோகஸ்;தர்களுக்கு ஒரேநேரத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த வள நிலையம் அமைக்கப்படுகின்றது. அதற்குத் தேவையான இலத்திரனியல் உபகரணங்களும் வழங்கப்படும். அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான வழிகாட்டல்களுக்குரிய நூலகமும் இந்நிலையத்தில் ஏற்படுத்தப்படும்.
கிழக்கு மாகாணத்தில் 'உள்ளூராட்சி ஆளுகை' செயற்றிட்டமானது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படவுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
36 minute ago
42 minute ago