Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையை நிறைவேற்றித் தருவதற்காக நீங்கள் முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய தொடக்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரை அவ்விடயத்தை கொண்டு சென்று, அம்முன்மொழிவை நியாயப்படுத்தி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது மாத்திரமல்லாமல் புதிய உள்ளூராட்சி அமைச்சராக பைசர் முஸ்தபா பதவியேற்றதோடு,கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இவ்விடயத்துக்காக பிரத்தியேகமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவரது இணக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்.
அத்துடன் உள்ளூராட்சி அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்களது எழுத்து மூலமான கோரிக்கையையும் சமர்ப்பித்துள்ளதாக அறிகின்றோம்.
இதேவேளை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக சில புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்க வேண்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா, தங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பிலும் பிரஸ்தாபித்துள்ளார்.
அந்த வகையில், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான பிரகடனத்தை வெளியிடுவதற்கு வேண்டிய உத்தியோகபூர்வ நடவைக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
01 Oct 2025
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Oct 2025
01 Oct 2025
01 Oct 2025