Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
எந்தவொரு சமூகத்துக்கும் இலங்கை முஸ்லிம்கள் எதிரானவர்கள் இல்லையென இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்
வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ் மக்கள் பேரவை ஒரு சமூக முன்மாதிரிக்கான அமைப்பெனவும் அவர் கூறினார்.
சம்மாந்துறையிலுள்ள இலங்கை சமாதானக் கற்கைகள் நிலைய அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் உரையாற்றுகையில், 'தற்போது எமது நாடு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் மக்களின்; கருத்துகளை அறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை சிறந்த ஜனநாயகப் பண்;பாகும். இம்முயற்சியானது இந்நாட்டு மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்த துன்பங்களுக்கு ஒரு தீர்வாக அமைய வேண்டுமென்பதே எமது அமைப்பினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும்.
இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, சிறுபான்மை மக்கள் துன்பங்களை அனுபவித்தனர். இன்று அந்த மக்களுக்கான தீர்வு எட்டப்படும்போது, அத்தீர்வானது மேலுமொரு உரிமைப் போராட்டத்துக்கான விதையாக அமையக் கூடாதென்பதில்; எமது கட்சி விழிப்புடன் உள்ளது.
தமிழ் மக்களின் தேவைகள், அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளமை மட்டுமன்றி, தமது மக்களுக்கான ஒரு தீர்வையும்; முன்வைத்துள்ளமை தமது சமூகம் தொடர்பான தமிழ்த் தலைவர்களின் அக்கறையை கோடிட்டுக் காட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.
இன்று முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகள் நாடாளுமன்ற ஆசனங்களையும் அதனூடாக கிடைக்கும் சலுகைகளையும் மையப்படுத்தியதாக இருப்பதை காணமுடிகின்றது. சர்வதேச மட்டத்தில் ஒலிக்க வேண்டிய எமது முஸ்லிம் தலைமைகளின் குரல்கள், இன்று சமூக வலைத்தளங்களுக்குள் சுருங்குவது எமது சமூகத்துக்கு கிடைத்த பின்னடைவாகும்.
தமிழ்ச்; சமூகத்தை மாத்திரம் பிரதிபலிக்கும் ஓர் அமைப்பாக இருக்கின்ற தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து ஏனைய சமூகங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது இந்த அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளிலிருந்து தெளிவாக தெரிகின்றது. இருந்தபோதிலும், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, தமிழ் மக்கள் பேரவை ஒரு சமூக முன்மாதிரிக்கான அமைப்பு என்பதில் எமது கட்சிக்கு உடன்பாடு உண்டு.
இந்த நாட்டின் தமிழ் மக்கள் தமக்கான ஒரு தீர்வினை முன்வைக்கும்போது தமக்கு விரும்பியதை கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு. அது தனிநாடு என்றோ, சமஷ்டி என்றோ அல்லது இணைந்த வடக்கு, கிழக்கு என்றோ அது இருந்திட்டு போகட்டும். அதற்கு நாங்கள் எதிரிகள் இல்லை. அதேநேரம் தாம் கோருகின்ற ஆள்புல நிலப்பரப்புக்குள் வாழும் முஸ்லிம் மக்களை ஒரு தனியான இனமாக அங்கிகரிக்க அல்லது ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு ஒரு பக்குவப்படாத தமிழ் மக்கள் பேரவை முஸ்லிம்களை பெரும்பான்;மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தையும் சேர்த்துக்கொண்டு ஆட்சி செய்ய நினைப்பதை எமது தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
தமது ஆள்புலப்பகுதிக்குள் இன்னொரு சமூகத்தை இணைத்துக்கொண்டு ஒரு நேர்மையான ஆட்சியை செய்ய முடியாத அமைப்பை நம்பி முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கை தொடர்பில் பேசாமல் இருக்க முடியாது.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் எமது தமிழ்ச்; சகோதரர்கள் பட்டதுன்பங்களை கண்டவர்கள் என்ற வகையில் அந்த மக்களுக்கான நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வுக்கு இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் நிச்சயம் ஒத்துழைப்பை வழங்கும். அதேநேரம், இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தையும் இன்னொரு ஆயுதப் போராட்டத்தினை நோக்கி நகர்த்தும் வண்ணம் இந்த நாட்டில் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தினையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்று தமக்கான தீர்வாக சமஷ்டி ஆட்சிமுறையொன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் இருக்கும் வண்ணம் 9 மாகாணங்களும் 9 சமஷ்டிப் பிரதேசங்களாக மாற்றப்பட்டு அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் வடக்கு, கிழக்கு பிராந்தியங்கள் இணைந்த ஒரு சமஷ்டியை முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். ஒற்றையாட்சிக்குள் ஒரு கூடுதல் அதிகாரப்பகிர்வு என்பதையே இன்று எம்மால் சிபாரிசு செய்ய முடியும். இந்த கருத்து தமிழ் மக்கள் பேரவையை பொறுத்தவரையில் எதிராக தோன்றினாலும் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த தீர்வாகும். இல்லையேல், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சில தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வறுமை நிவாரண போராட்டமாக மட்டுமே இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 May 2025