2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'எல்லை மீள் நிர்ணயம் பாதிப்புக்களை ஏற்படுத்த கூடாது'

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில் எல்லை மீள் நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியன அமுல்படுத்த வேண்டும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும் அக்கட்சியின் உயர்பீட  உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை(09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் படி, வட்டார முறையும் விகிதாசார முறையும் கலந்ததாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,எல்லை நிர்ணயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தற்போது அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவங்கள் பாதிப்படையாத வகையில் மறுசீரமைப்புக்கள் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பிலும் இரு சமுகத்தினரும் பாதிப்படையாத வகையில் தீர்வு எட்டப்பட வேண்டும்.

கிழக்கு மாகாண முங்லிம் மக்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யவேண்டியது முக்கியமானதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                     
                                       
                                                             

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .