2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'319 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பைஷல் இஸ்மாயில்

1970ஆம் ஆண்டு ஹிங்குரானை சீனிக்கூட்டுத்தாபனத்துக்கென பெறப்பட்ட முஸ்லிம்களின் பல கரும்புக் காணிகளுக்கு நட்டஈடு தருவதாக கூறப்பட்டு சுவீகரிக்கப்பட்டன. இவற்றில் கன்னியம்பத்தை, கல்மடுக்கண்டத்தின் குடுவில் காட்டு வெளிக்கண்டத்தில் உள்ள 319 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு இதுவரை நட்டஈடோ, மாற்றுக்காணியோ சீனிக் கூட்டுத்தாபனத்தால் இன்றுவரை வழங்கப்படவில்லை என உலமாக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'குறிப்பிட்ட காணி உரிமையாளர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேயாரு காரணத்துக்காகவே இவர்களுக்குரிய நட்டஈடு வழங்கப்படாமல் இருக்;கின்றது. இது பற்றி அதிகாரத்தில் இருந்த, இருக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் அக்கறை கொள்ளாதிருந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இருந்தும் காணிகளுக்கான நட்டஈடு வழங்காமையை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த நிலையில் நல்லாட்சியின் நாயகர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த ஆட்சியில் மேற்படி காணி உரிமையாளர்களுக்கான நட்டஈடு கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்புகிறார்கள்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X