2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஐந்து உணவக உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 21 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐந்து உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நாளை மறுதினம் வியாழக்கிழமை  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கல்முனை மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் தெரிவித்தார்.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் உள்ள 10 உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்; திங்கட்கிழமை  (20) திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, ஐந்து உணவகங்களின் உரிமையாளர்களை எச்சரித்துள்ளதுடன், ஐந்து உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது, பாவனைக்கு உதவாத உணவுகளை வைத்திருந்தமை மற்றும் பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் பாவித்தமை தொடர்பில்  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X