2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'2006க்குள் நியமனம் பெற்றவர்கள் கிழக்கு மாகாணசபைக்குள் உள்ளீர்க்கப்படவேண்டும்'

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கடந்த 2006.12.22ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்ற சகல ஆசிரியர்களும் கிழக்கு மாகாண சபையினுள் உள்ளீர்க்கப்படுவது கட்டாயமானதாகும் என்று கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.நஸூகர்கான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிண்ணியா வலயப் பாடசாலை அதிபர்களுக்கு இன்று சனிக்கிழமை (24)  அனுப்பி வைத்துள்ள  சுற்றறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உள்ளீர்ப்புச் செய்யப்படாத ஆசிரியர்களின் தாபன நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறு அசௌகரியங்களை வலயக் கல்விப் பணிமனை எதிர்நோக்குவதாகவும்  இதனால் ஆசிரியர்களுடைய  பதவி உயர்வுகள் மற்றும் ஆசிரியர் சேவையில் நியமனத்தை முற்திகதியிடுவதற்கும்  காலதாமதம் ஏற்படும் என்றும் அச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X