Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
சாய்ந்தமருது பிரதேசத்தில் வறியக் கோட்டுக்குட்பட்ட 9 குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் இணைப்புகளும் 4 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் மஜீத் கூறியதாவது,
கிழக்கு மாகாண சுகாதார, சமூக நலன்புரி, கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய,அவர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து,தெரிவு செய்யப்பட்ட 13 குடும்பங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது எனது முதற்கட்ட ஏற்பாடாகும். இரண்டாம் கட்டமாக அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மேலும் பல குடும்பங்களுக்கு இவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்பேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago