Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் உளவள ஆலோசனை வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு சுமார் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள், அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கணவனை இழந்த பெண்கள், விசேட தேவையுடையோருக்கான உள ஆற்றுப்படுத்தலின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களுக்கான பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் எஸ்.சதீஸ்குமார், அம்பாறை மாவட்ட செயலகத்தின் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஜ.எல்.எம்.இர்பான், திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி எஸ்.நடேஷன், திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவீச்சந்திரன், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் பிரதேச உத்தியோகத்தர் கே.பாஸ்கரன் மற்றும் இவ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியேர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை கையளித்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
8 hours ago
K.Mathiyalagan Monday, 09 November 2015 05:49 AM
Good support
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago