2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

45 கோடி மக்கள் தொகையினருக்கு உளநலக் குறைபாடு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

உலகில் 45 கோடி மக்கள் தொகையினர் உளநலக் குறைபாட்டைக்; கொண்டுள்ளனர். இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர்; உளநலக் குறைபாடுடையவர்களாக காணப்படுவதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மனநல வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல் தெரிவித்தார்.

தேசிய உளவளத்துணை தினத்தை முன்னிட்டு 'உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை' எனும் கருப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவளத்துணைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு, அப்பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'ஏனைய நோய்களான நீரிழிவு, குருதி உயரழுத்தம், கொலஸ்றோல் போன்ற நோய்களை விட உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறை மிக இலகுவானதுடன் இவற்றை குறுகிய காலப்பகுதியினுள் குணப்படுத்தவும் முடிகின்றது.

இன்று இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதற்குக் காரணம் சமூகத்தில் இதனை ஒரு பாரிய நோயாகப் பார்க்கப்படுவதாகும். இவ்வாறான சமூகப் பிரச்சினைகள் காரணமாக மிகக் குறைந்தளவிலானவர்களே இதற்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். இலங்iயில் உளநலம் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதமானவர்களே அதற்கான சிகிச்சையினைப் பெற்று வருகின்றனர்' என்றார்.

அட்டாளைச்சேனைப் பிரதேச உளநல ஆலோசகர் ஏ.பி.மனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .