Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கடந்த யுத்தம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நியாயம் இந்த நல்லாட்சியில்; கிடைக்க வேண்டும் எனக் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மனித எழுச்சி நிறுவனத்தின் விழிப்புணர்வுக் கூட்டம், அக்கரைப்பற்றில் இன்று (18) நடைபெற்றபோதே, அவர்கள் இவ்வாறு கூறினர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், 'கடந்த யுத்த காலத்தின்போது தொழில் நிமித்தம் சென்ற எமது கணவன்மார், பிள்ளைகள், உறவினர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும்.
எங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உன்மையை இந்த நல்லாட்சியில் கண்டறிந்து, அதற்கான நீதி கிடைக்கும்வரை எங்களுடைய உரிமைக்காக சர்வதேசம்வரை குரல் கொடுப்போம்.
மேலும், இதனால் பாதிக்கப்பட்ட எமக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்றனர்.
இதேவேளை, 1985ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அம்பாறையில் மூவினத்தைச் சேர்ந்த 3,216 பேர் காணாமல் போயுள்ளதாக மனித எழுச்சி நிறுவனம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
02 May 2025