2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோணாவத்தை கொட்டுப்பாலத்தை புனரமைக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சேதமடைந்து காணப்படும் கோணாவத்தை கொட்டுப்பாலத்தை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோணாவத்தை கொட்டுப்பாலம் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு சேதமடைந்து காணப்படுகின்றது.  

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இப்பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல்; உள்ளதுடன், அச்சத்துடனேயே இப்பாலத்தின் ஊடாக பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அம்மக்கள் கூறினர்.

இந்தப் பாலத்துக்கான புனரமைப்புத் தொடர்பில்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவிடம் இன்று புதன்கிழமை கேட்டபோது, 'இப்பாலம் கூடிய விரைவில் புனரமைக்கப்படும். இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எடுத்துள்ளார்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X