2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு நன்றி'

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கையில் உள்ள அனைத்து சபைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கிழக்கு மாகாண சபை திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருக்கும் இவ்வேளையில், எதிர்க்கட்சியில் மீதமாக இருக்கும் உறுப்பினர்களும் ஆளும்தரப்பின் பக்கம் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கிழக்கு மாகாண ஆட்சியில்  நடுநிலை தவறாது மூவின மக்களையும் ஒரே பார்வையில் ஒரே நோக்கில் விகிதாசார முறையில் ஒவ்வொரு நடவடிக்கையும் நகர்வுகளும் சரியாக இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

கிழக்கில் சேவைகள், வேலைவாய்ப்புக்கள் என்றாலும் விகிதாசாரம் பேணப்படுகிறது.நல்லாட்சியில் அனைவரும் பலன்பெற வேண்டும். சுயநலமாக எந்தத் தீர்மானமும் எடுக்காது, கலந்தாலோசனை மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் அனைத்து உறுப்பினர்களும் இந்நல்லாட்சியை விரும்புகின்றனர்.

ஆகவே, அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் இன்னும் கிழக்கில் தேங்கிக் கிடக்கும் முக்கிய பல வேலைகளை மக்களுக்காக செய்து கொடுக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X