Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்துக்களின் கோவில்கள் உடைக்கப்பட்டு, அதன் தடயங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றமைக்கு சில சதிகாரர்கள் செய்யும் செயற்பாடு, எதிர்காலத்தில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
சம்மாந்துறை கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதன் வளாகத்திலுள்ள பிள்ளையார் கோவிலிலும் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் தகர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சம்மாந்துறை கோரக்கர் கோவில் கிராமம் பூர்வீகக் கிராமமும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமும் ஆகும். இந்தக் கிராமத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்காக இந்துக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்றார்.
'கடந்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சமூகமாக தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலும், புதிய அரசாங்கத்தின் நல்லாட்சி நடைபெறுகின்ற இவ்வேளையிலும், தமிழர்களின் கோவில்களையும் இருப்பிடங்களையும் இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சதித்திட்டத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது
இவ்வாறே கடந்த காலத்திலும் அம்பாறை மாவட்டத்தில் பல கோவில்கள் உடைக்கப்பட்டும் திருட்டும் இடம்பெற்றிருந்தன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைதுசெய்யப்படவில்லை' என்றார்.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago