2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'கரிசணையுடன் செயற்படும்போது சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்'

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஒரு பிள்ளையின் வளர்ப்பில் பெற்றோர்கள் கரிசணையுடன் செயற்படும்போதுதான் எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.முகம்மது பஸீல் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சிறுவர் காப்பகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை (07) அக்கரைப்பற்று மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.ஏ. வஸிர்டீன் தலைமையில் பாலமுனை ஜம்மியத்துல் ஸஹ்வா இஸ்லாமிய தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் சிறுவர் உரிமை சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்பிராந்தியத்தில் சமூக சீரழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சமயத் தலைவர்களும் கல்விமான்களும் முன்வர வேண்டும்.

சிறுவர்கள் நாளாந்தம் உறவினர்களாலும் ஏனைய நபர்களாலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவர்களை சரியான முறையில் பராமரிப்பதற்கு இப்பிராந்தியத்தில் சிறுவர் காப்பகங்கள் இல்லாமை பெரும் குறையாக உள்ளது.

சிறுவர் காப்பகம் அமைப்பதற்கு முன்வந்துள்ள உங்களை பாராட்டுகின்றேன். ஒரு சமூகம் சரியான பாதையில் செல்ல வேண்டுமானால் அச்சமூகத்தின் தலைவர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

சிறுவர்கள் தமது பாதுகாவளர்களாலேயே துன்புறுத்தப்பட்டு வருகின்றார்கள். இவை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரால் மட்டும் முடியாது மக்களும் முன்வர வேண்டும் என்றார்.

மேலும்,பாலமனைப் பிரதேசத்தில் சிறுவர்காப்பகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .