Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா,-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கையில் 20 சதவீதமான மக்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாhதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலவச மருத்துச பரிசோதணையும் இன்று சனிக்கிழமை (12) சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மனிதர்களின் சீரான உடல் இயக்கத்துக்கும் சக்திக்கும் குறிப்பிட்டளவு சீனி தேவைப்பாடாக அமைகின்றது. உடல் செயற்பாடுகளின் குறைபாடுகள் காரணமாக இதன் அளவு இரத்தத்தில் விபரீதமான முறையில் அதிகரிக்கும் போதே அது நீரிழிவு நோயாக அமைகின்றது.
அதிகமானவர்களின் உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நடத்தைகள் காரணமாகவே தொற்றா நோயான இந்த நீரிழிவு நோய் அதிகம் ஏற்படக் காரணமாக உள்ளதென்ற உண்மையயை நாம் மறந்து செயற்படுவது ஆபத்தான விடயமாகும்.
இது ஒரு அனுசேப தொழிற்பாட்டு நோயாகும். உணவு, நடத்தை, உளரீதியான மாற்றங்களே இதனைக் கட்டுப்படுத்தும்.
இதன் ஆரம்ப அறிகுறிகளாக அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி எடுத்தல், சோம்பல்தனம், கண்பார்வை குறைதல், தோல் உலர்தல் என்பன ஏற்பட்டால் உடன் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று நீரிழிவு நோய்பற்றி அறிந்து கொண்டு வைத்தியரின் ஆசோசனையைப் பெற்று நடந்து கொள்ளவது முக்கியமாகும்.
இந்த நோயினை சிறந்த முறையில் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால் இருதய நோய், நரம்புத் தொகுதி பாதிக்கப்பட்டு காயங்கள் நீண்டகாலமாக ஆறாது இருத்தல், கால்,கைகள் விறைப்பு ஏற்படல், பக்கவாதம் என பாரிய பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தை சுகாதாரத் துறையில் ஒரு முன்மாதிரியாக மாற்றியமைப்பதற்கு திட்டம் வகுத்துள்ளோம். ஊடகவியாலாளர்களான நீங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
தொற்றா நோய் மருத்துவ பரிசோதனை, தொற்றா நோய் சுய விபர மருத்துவ அறிக்கை, உடற் திணிவுச் சுட்டி, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பரிசோதனைகளும் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago