2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'கற்றல் அடைவை மேம்படுத்துவதற்காக சுற்று நிருபம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்காக ஒவ்வாரு பெற்றோரும் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

2013/17 ஆம் இலக்க அரச சுற்று நிருபம் இவ்விடயம் குறித்து வலியுறுத்திக் கூறுகிறது.அங்கத்துவம் பெற்ற பெற்றோர்கள் மாத்திரமே பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் இச்சுற்று நிருபம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

இதற்கமைய, அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக 500 ரூபாய் பாடசாலையில் செலுத்தி அற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதிபர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .