2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கல்முனை நகர அபிவிருத்தியில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஏ.எல்.எம்.ஷினாஸ், எஸ்.சபேசன்  

கல்முனை நகர அபிவிருத்தியில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை, பாண்டிருப்புப் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு  கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கல்முனை நகர அபிவிருத்தியில் பாரதூரமான புறக்கணிப்பு நடந்தேறி இருக்கின்றன. இது தொடர்ச்சியாக நடக்குமாயின், தமிழ் -முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்பமுடியாமல் போய்விடும். கடந்த காலத்தில்; தமிழ் மக்கள் பல ஏமாற்றங்களை அனுபவித்துள்ளார்கள்' என்றார்.

'தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்காக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். நாம் இணக்க ரீதியான அரசியலை முன்னெடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எதிர்காலத்தில் நாம் சமூக ரீதியாக ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டியவர்களாக இருக்கிறோம்' எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X