Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எல்.எம்.ஷினாஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றை ஒரு புறம் வைத்துவிட்டு கல்முனை மண்ணை அபிவிருத்தி செய்ய தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபடவேண்டும் என விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பாறை - கல்முனை பிரதான நீர் குழாய் மற்றும் கல்முனை நீர் உந்தும் நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றபோதே, பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தெரிவிக்கையில், 'தமிழ், முஸ்லிம் சமூகம் ஒரு வரலாற்று முடிவினை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இந்த பாண்டிருப்பு மண்ணில் இவ்வாறு இரு சமூகத்தவர்களும் தமது கருத்துக்களை பேசுகின்ற சூழ்நிலை அன்று இருக்கவில்லை. தமிழ் சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்துகின்ற சில முஸ்லிம் அரசியல் தலைவர்களை பார்த்து நான் கவலையடைகிறேன். இரட்டை வேசம் போட்டு பேசும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அல்ல.
முஸ்லிம், தமிழ், மலையக தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வேட்டு வைக்க நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர இருந்த 20ஆவது திருத்தச் சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் முடக்கியது ஒரு வரலாற்று பணியகம். அந்த நம்பிக்கையில் இன்று சிறுபான்மை கட்சிகள் அரசியலமைப்பு, தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்தத்தை மு.கா. தலைவரின் கீழ் தான் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறார்கள். இன்று அந்த பொறுப்பு மு.கா தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025