2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் வெளிவந்த கடல் நீர்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென்று பெருக்கெடுத்துவந்த  கடல் நீர், நடராசா  வடிகான் மூலமாக இப்பிரதேசத்திலுள்ள கால்வாய்களுக்குச் சென்றுள்ளது. இதைக் கண்ட மக்கள் பீதியில் சற்றுநேரம் அலைந்து திரிந்தனர்.

மாரி காலத்தில் வெள்ளநீர் வடிந்தோடி கடலுக்குச்; செல்வதற்காக இக்கடற்கரையை அண்டிய பகுதிகளில் வடிகான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோடை காலத்தில் நடராசா வடிகான் நீரின்றி வரண்டு காணப்பட்டிருந்தது. கடல் நீர் பெருக்கெடுத்ததால் அவ்வடிகானில் நீர் வந்துள்ளது.  

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட கடற்கரைச் சூழல்  பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரிடம்  கேட்டபோது 'அதிக வெப்பம் காரணமாக உலகிலுள்ள பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இங்கும் கடல் நீர் வெளிவந்திருக்கலாம். இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X