2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'கல்வி இல்லாத சமூகம் பாழடைந்த வீடாகும்'

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ,ஏ.ஸிறாஜ்

சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது கல்வியாகும். எனவே, ஒரு சமூகத்தில் கல்வி இல்லை என்றால் அந்த சமூகம் பாழடைந்த வீடு போன்றதாகும் என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிம் nதரிவித்தார்.

பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் 'ஹிதாயா பிஞ்சுகளின் அஞ்சு விரல் பிடித்து அழகாக எழுதப் பழக்கும் கற்கை ஆரம்பா விழா' நேற்று செவ்வாய்க்கிழமை, (19) பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகவும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி கௌரவ அதிதியாகவும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான பி.எம்.அபுல்ஹஸன், எம்.ஏ.எம்.அஸ்ஹர், பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா, அல்ஹிக்மா வித்தியாலய அதிபர் எம.எச்.அப்துல் றகுமான், இப்ன ஸீனா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.சாக்கிர் ஹீஸையின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது அவசியமாகும். மேலும், பாடசாலையில் பிள்ளைகளை சேர்த்து விட்டால் மாத்திரம் போதாது, பாடசாலையுடன் பெற்றோர்கள் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் போது நாங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்ற சிறந்த கல்விச் சமுதாயமொன்றை உருவாக்க முடியும் என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X