2025 மே 20, செவ்வாய்க்கிழமை

களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்தும் அம்மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமாகிய  இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது அக்கரைப்பற்று -கல்முனை பிரதான வீதிவரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பகிடிவதை என்ற குற்றச்சாட்டின் பேரில் களனிப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் புதன்கிழமை (11) கைதுசெய்யப்பட்டதுடன், ஏற்கெனவே ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனவே, கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இம்மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பதுடன், மேலும் கைதுசெய்யப்படுவதை நிறுத்துமாறும் ஆhப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் கைது பற்றி அரசாங்கம் பாராமுகமாக இருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X