2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'கஷ்டப் பிரதேசங்களிலேயே அதிகமான மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கஷ்டப் பிரதேசங்களில் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகி  வருகின்றனர் என அப்பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எம்.எப்.றிபாஸ் தெரிவித்தார்.

மேலும், இப்பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரNhயகங்களும் அதிகம் இடம்பெற்று வருவதை அறிய முடிகின்றது எனவும் அவர் கூறினார்.

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைச் சமூகத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆலம்குளம் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் பாதுகாப்புப் பிரிவு, திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவு, பாடசாலைச் சமூகம், பொலிஸார், வலயக் கல்வி அலுவலகம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். மேலும், சுமார் 45 சதவீதமான மாணவர்கள் இப்பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருவதில்லை என்ற தகவல் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் கூறினார்.

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமை  தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறிருக்க, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையுடன், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X