2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சீமெந்துப் பக்கெட்டுக்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 பயனாளிகளின்  வீட்டுப் பூச்சு வேலைக்காக தலா 10 சீமெந்து பக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட 91 பயனாளிகளுக்கு சீமெந்துப் பக்கெட்டுக்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனைப் பிராந்திய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் 1,000 வீடுகள் வீதம் நாடளாவிய ரீதியில் 25,000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .