2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சாய்ந்தமருதுவுக்கு தனி உள்ளூராட்சிசபை: பிரேரணை நிறைவேற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கல்முனை உட்பட நாட்டின் பல உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளூராட்சிசபையை   ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்ற வேண்டும். இதன் உந்துசக்திகளாக கல்முனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; உயர்பீட உறுப்பினரான வை.சி.யஹியாகான், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'இவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தமையானது கல்முனை மாநகர சபைக்கு ஒரு வரப்பிரசாதமே. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாய்ந்தமருதுவுக்கான உள்ளூராட்சிசபைத்; தேவையைப் பிரேரணையாக நிறைவேற்ற வேண்டும். இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களின் பொறுப்புமிக்க பங்களிப்பு மிக அவசியமாகும். இவர்களே இந்த விடயத்தை ஒரு பிரேரணையாக கல்முனை மாநகர சபையில் முன்வைக்க வேண்டியவர்களாவர்.

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வர்த்தக மையமாகவும் இலாபமீட்டும் தொழிற்றுறைகளைக் கொண்டதுமாக இன்று விளங்கும் சாய்ந்தமருது, தனியான பிரேச சபையாக பிரகடனம் செய்யப்படுவதற்கான சகல அம்சங்களையும் கொண்டதாகவே விளங்குகிறது. சாய்ந்தமருதுவை தனியான பிரதேச சபையாக ஸ்தாபிப்பதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருப்பதுடன், மக்களின் தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் எந்த இடையூறுகளுமின்றி முன்னெடுக்க முடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X