Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால்; ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் அவரவரது சொத்துகளை அனுபவிக்கக்கக் கூடியதாகவும் எந்தவித அழுத்தங்களின்றி சுயமாக தமது வேலைகளை செய்யக்கூடியதாகவும் இருக்கின்றதென உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 12 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர்; ஒற்றுமையுடன் செயற்படும் நல்லாட்சிக் காலத்தில் உங்கள் பிரதேசத்துக்கு விஜயம் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. மூவின மக்களும் வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தை நாம்; அவதானித்தபோது, எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் போன்று மிக ஒற்றுமையாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மக்கள் பல்வேறு கஷ்டங்கள், இன்னல்களை அனுபவித்தனர். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர்; வெளிநாடுகளிலுள்ளோர். இப்போதுள்ள நல்லாட்சிக் காலத்தில் நாட்டுக்கு வருகின்றனர். முதலீட்டாளர்கள் வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நல்லாட்சி நடப்பதால் நாங்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றோம்.
யுத்தம் காரணமாக வெளிநாடு சென்றவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்து ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்புவோமென எமது பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அதிகமானோர் நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இந்தியாவுக்குச் சென்றனர். ஆனால், தற்போது அங்குள்ளவர்கள் படிப்படியாக இங்கு வரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எமது நாட்டில் தீயசெயல்கள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். கடந்த காலங்களில் சில அரசியல் சக்திகளின் தீய செயல்களினாலேயே யுத்தம் இடம்பெற்று மக்கள் அழிவுறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்று அவ்வாறான நிலை மாறி நல்லாட்சி இடம்பெறுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சிச் சூழலில் மிகவும் பிரயோசனமாக கலாசார மத்திய நிலையம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது எந்த நோக்கத்துக்காக நிறுவப்பட்டதோ அதனை நிறைவேற்றும் வகையில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் உங்களது கலாசாரங்களை இதனூடாக வளர்க்கவேண்டும். அதற்குத் தேவையான வழியேற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 May 2025