2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

2015ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் விடயம் தொடர்பில் இலவச வழிகாட்டல் செயலமர்வு, எதிர்வரும் எட்டாம் திகதி காலை 9.30 மணிக்கு கல்முனை சாஹிரா கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வில், சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் வளவாளராக கலந்துகொண்டு, இது தொடர்பில்  தெளிவுபடுத்தவுள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் மத்தியில் பொருத்தமான பாடநெறி,  அப்பாடநெறியைக் கொண்டுள்ள பல்கலைக்கழகம் என்பவற்றை தெரிவு செய்வதில் பல்வேறு முரண்பாடுகள், சந்தேகங்கள் நிலவுவதுடன்,  சிலவேளைகளில் அவர்கள் தவறு இழைத்து விடுகின்றனர். இதைக் கருத்திற்கொண்டே இந்தச் செயலமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் தெரிவித்தது.

இதில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் 077-1094058 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X