Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
நல்லாட்சியில் நாடு பூராகவும் 150 சிறிய கைத்தொழில் கிராமங்களை உருவாக்கி அவற்றை கூட்டுறவுச் சங்கமாக மாற்றி அதில் 3 ஆயிரம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதன் ஊடாக அவர்களை சிறந்த வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளாக மாற்றுவதே இத்தைய்யல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பதன் நோக்கமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதலாவது தையல் பயிற்சி நிலையத்தை கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (01) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'நான் இந்த அமைச்சை பொறுப்பெடுக்கும்போது இவ்வாறான எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை. கடந்த அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தபோது இவ்வாறான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இந்த புதிய திட்டத்தினை இந்த நல்லாட்சியிலும் ஏற்படுத்தி ஆகக் குறைந்தது 20 பேருக்கும், இதன் பின்னர் இடத்தின் அளவையும் தேவையையும் பொறுத்து மேலும் அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். அந்த 20 பேரையும் ஒரு கூட்டுறவுச் சங்கமாக உருவாக்கி நாட்டிலே 150 கூட்டுறவுச் சங்கங்களை ஏற்படுத்தி 3 ஆயிரம் உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி சிறந்த வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.
நாடு பூராகவும் 150 சிறிய கைத்தொழில் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. முதலில் ஆசிரியர்களுக்கு இருவாரகால பயிற்சியை வழங்கி பயிலுனர்களை பயிற்றுவிக்கவுள்ளோம். ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது அம்பாறை மாவட்டத்தில் 15 தைய்யல் பயிற்சி நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 30 நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் 22ஆம் திகதி சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியிலே வர்த்தக கண்காட்சியை நடத்தி அதனூடாக 3 ஆயிரம் குடும்பங்கள், சிறுவியாபாரிகள், சிறிய கைத்தொழில் முயற்சியாளர்கள் அல்லது புதிதாக கைத்தொழில்களை செய்யவுள்ளவர்கள் போன்றோருக்கு பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago