2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'சிறந்த சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அனைவரினதும் கடமை'

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சிறுவர்களுக்கான சிறந்த சூழலையும் சுற்றாடலையும் அமைத்துக் கொடுப்பது அனைவரினதும் கடமையாகும் என சிரேஷ்ட உள நல துறை வைத்திய அதிகாரி சஹ்றா சஹாப்தீன் தெரிவித்தார்.
 
'தேசத்தின் குழந்தைகளை உயிரைப்போல் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது கிடைத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

யார் கெட்டவர்கள், யார் நல்லவர்கள் என்பதனை சிறுவர்களினால் அறிய முடியாதுள்ளதால் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
 
சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் விழிப்படைவதைவிட அவர்களுக்கான ஆபத்துக்கள் வரும் முன்னரே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும்,சிறுவர்கள் அறிந்திராதவர்களினால் துன்புறுத்தப்படுவதை விட அறிந்தவர்கள், உறவினர்களினாலேயே அதிகம் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் நிலைமைகளை தரவுகள் மூலம் அறியமுடிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X