Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் பொத்துவில் முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எஸ்.பி.அப்துல் மஜிதை களமிறக்குவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி அப்துல் மஜிதின் ஆலோசகர் மௌலவி ஏ.முகைதீன் பாவா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்கொள்ளவுள்ள அடுத்த மிக முக்கியமான தேர்தல்தான் பிரதேச சபைத் தேர்தலாகும்.இந்த தேர்தல் மூலம் முழு பொத்துவிலையும் ஆளுகின்ற ஒரு சிறந்த சாணாக்கியம் நிறைந்த தலைவரை தெரிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த காலத்தில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தாங்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறுசெய்ததுடன்,கிடைத்த பணங்களை பிரித்து பங்கிட்டு சூறையாடியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி பாதைகள் கொந்தராத்து செய்து சில மாதங்களில் சேதமடைகின்ற வீதியின் அவலநிலையை பொத்துவிலில் தான் காணக்கூடியதாக இருக்கின்றது.இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலக்கட்டத்தில் பொத்துவில் பிரதேச மக்கள் உள்ளனர்.
ஊரைக்காட்டிக்கொடுத்து, மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடுகின்றவர்களை ஓரம்கட்டி நியாயமான தலைவரை தெரிவுசெய்வதே எமது மக்களின் இலக்குகளில் ஒன்றாக உள்ளது. அதற்காக எஸ்.எஸ்.பி.அப்துல் மஜிதை களமிறக்கவுள்ளோம் என்றார்.
7 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago