2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'சிறந்த வெளியீடுகளே பாராட்டை பெற்றுக்கொடுக்கின்றது'

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஒரு பாடசாலையின் கீர்த்தியையும் புகழையும் தேடிக்கொடுப்பது அப்பாடசாலையின் நிறைவான பௌதீக வளமாக அமைவதில்லை. மாறாக பாடசாலையின் சிறந்த வெளியீடுகளே அந்தப்பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்துக்கும் சிறந்த நற்பெயரையும் புகழையும் பாராட்டையும் பெற்றுக்கொடுக்கின்றது என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட ரூபாய் 150,000 நிதியொதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்துக்கு பேண்ட் சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இப்பாடசாலையின் பௌதீக வளம் சிறப்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் வெளியீடுகளும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களும் திருப்திகரமான நிலையில் அமையாததனையிட்டு மனவேதனை அடைகின்றேன்.

ஒரு பாடசாலையின் புகழ் ஓங்கும் போதே, அந்தப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்கள், அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் பெருமை தேடிக்கொடுப்பதற்கு காரணமாக அமைகின்றது. வளர்ச்சி அடைந்த ஒரு பாடசாலையாக இப்பாடசாலை அமைந்த போதிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் இன்னும் மேம்பாடு அடையவில்லை.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து இருக்க முடியாது. ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருந்து மாணவர்களை வழிநடத்தி சிறந்த சமூதாயம் ஒன்றை ஒருவாக்குவதற்கு அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியாக அமையும்.

ஆசிரியர்களின் முன்மாதிரியான வழிகாட்டுதல்களும் மாணவர்களின் நடத்தைகளும் மற்றவர்களை கவர்ந்து கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும்.

அவ்வாறு பாடசாலையின் கலாசாரம், பண்பாடுகள், நடத்தைக் கோலங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்.அப்போதுதான் அது எமது பின்சந்ததியினருக்கு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றார்.

பாடசாலை அதிபரும் அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.ஏ.சீ. கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X