2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சக்தி மிக்கவர்களாக இளைஞர்களே உள்ளனர்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

ஒரு நாட்டில் சக்தி மிக்க பிரிவினராக இளைஞர்களே காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களை அந்த நாடு அபிவிருத்தியில் பயன்படுத்திக்கொள்வதற்கான சிறந்த திட்டங்களை திட்டமிட வேண்டுமென திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டத்தினை இன்று திங்கட் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது, 'ஒரு அபிவிருத்திக்கு முக்கியமாக மூன்று விடயங்கள் தேவைப்படுகின்றன. மூலதனம், உழைப்பு மற்றும் நேரம் ஆகியவையாகும். இவற்றில் இளைஞர்களுக்கு உடல் உழைப்புக்கான சக்தி இருக்கும.; இரண்டாவது நேரம் இருக்கும். ஆனால் இவர்களிடம் மூலதனம் இருக்காது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு சவாலாக அமைந்திருக்கும்.

அந்த வகையில் இளைஞர்களிடம் இல்லாத மூன்றாவது சக்தியான மூலனத்தைப் பெற்றுக் கொடுக்கின்றபோது அவர்கள் மேற்கூறப்பட்ட  உடல் உழைப்பு, நேரம் அத்துடன் மூலதனமும் ஒன்றாக கிடைக்கின்ற நிலையில் இளைஞர்கள் சக்திமிக்கவர்களாக தோற்றம் பெறுவார்கள். இவர்களை வளப்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டின் அரசாங்கத்திடம் அதிகாரிகளிடமும் காணப்படுகின்றது.

இதனை சிந்தித்துக்கொண்ட எமது அரசாங்கம் இளைஞர்களுக்கான பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அவற்றில் ஒரு வேலைத்திட்டமே இந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டம். அந்த வகையில் இளைஞர்களை நாட்டின் அபிவிருத்தியில் ஒரு பங்குதாரர்களாக மாற்றுவதற்கான திட்டங்களை அரசுடன் இணைந்து நாமும் செயற்பட்டு வளமான எதிர்காலத்தை இளைஞர்களின் சக்தியின் ஊடாக தோற்றுவிக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X