2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
 
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கிராமிய டெங்கொழிப்பு விழிப்புக் குழு அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அரசங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 
மேலும்,சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .