2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சடலம் மீட்பு; கைதான தம்பதி விடுதலை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, கனகராசா சரவணன்

அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்ற (57 வயது) விவசாயியின் மரணம் அதிர்ச்சியால் ஏற்பட்டதென பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கணவன், மனைவி ஆகிய இருவரையும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்றுச் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்துள்ளார்.

வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்காக குறித்த நபர், ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் மறுநாள் காலைவரை வீடு திரும்பாததையிட்டு உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

இந்நிலையில் நாவிதன்வெளி 6ஆம் கொலனிப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாயி சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மேற்படி கணவன், மனைவி ஆகிய இருவரையும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (08) இரவு சவளக்கடை பொலிஸார் கைதுசெய்தனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாப்பட்டது. இதன்போது அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவரையும்  நீதவான், விடுதலை செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X